Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜனநாயகத்தை வென்று விட்டது பணநாயகம் - ராமதாஸ்

ஜனநாயகத்தை வென்று விட்டது பணநாயகம் - ராமதாஸ்
, ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (12:10 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது.  இதுகுறித்து ராமதாஸ் ஜனநாயகத்தை பணநாயகம் வென்று விட்டதாக கூறியுள்ளார்.

 
ஆர்.கே.நகரில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 5வது கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில் தினகரன் 20.000 வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதவிட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார். திராவிட கட்சிகள் பணநாயகத்தை வளர்த்து தமிழகத்தை அழிப்பதாக கூறியுள்ளார். ஜனநாயகத்தை பணநாயகம் வென்று விட்டது. தினகரனின் முன்னிலை வகித்து வருவதை சீர்குலைக்கும் விதமாக ஆளுங்கட்சியினர் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
முதலில் பண பலத்தையும், பின் படை பலத்தையும் ஆளுங்கட்சியினர் காட்ட துடிக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு ராமதாஸ் தனது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சின்னம் முக்கியமில்லை ; ஜெ.விற்கு பின் நான்தான் : டிடிவி தினகரன் பேட்டி