Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம் - தொடர்ந்து தினகரன் முன்னிலை

ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம் - தொடர்ந்து தினகரன் முன்னிலை
, ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (09:07 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்றில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னணியில் இருக்கிறார்.

 
ஆர்.கே.நகரில் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆர்.கே.நகரில் உள்ள 2,28, 234 வேட்பாளர்களில் 1, 76,885 வாக்குகள் பதிவானது.  அதாவது 77 சதவீத வாக்குகள் பதிவானது.
 
இந்த தேர்தலில், மொத்தம் 50க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருது கணேஷ், குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் ஆகியோருக்கு இடையேதான் பலத்த போட்டி நிலவியது.
 
இந்நிலையில், சென்னை இராணி கல்லூரியில் இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. தற்போது வரை 13 சுற்றுக்கள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளது.. அதன்படி தினகரனே  முன்னிலையில் இருக்கிறார். தற்போதைய நிலவரப்படி,

டிடிவி தினகரன் -  64,627

மதுசூதனன் (அதிமுக)-  33,436

மருதுகணேஷ் (திமுக) - 17,140

கலைக்கோட்டுதயம் ( நாம் தமிழர்) - 2,607

கரு.நாகராஜன் (பாஜக)- 837  வாக்குகள் பெற்றுள்ளனர்.

 
இதில் முக்கியமாக அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட தினகரன் 31,191 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார். அதேபோல், பாஜக-வை விட அதிகமாக நோட்டோவிற்கு 1537 பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 14வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்....