Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு நடிகன் நாடகம் ஆடுகிறான்...

Advertiesment
ஒரு நடிகன் நாடகம் ஆடுகிறான்...
, வியாழன், 10 மே 2018 (15:11 IST)
ரஜினி என்ற ஒரு மாபெரும் நடிகன் நாடகம் நடித்துக்கொண்டிருக்கிறார். அதன் திரைக் கதை, வசனம் யார் என்று ஊர் அறியும்.  நாம் அதை பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.  
 
தமிழர்களின் துன்பத்திலும், துயரத்திலும், வேதனைகளிலும் சற்றும் பங்குக்கொள்ளாத சூப்பர் ஸ்டார் ரஜினி தான் புதிய தமிழகம் பிறக்கும் என்கிறார் !
 
முன்பு புதிய இந்தியா பிறந்தது என்றாரே அதே ரஜினி, தான் புதிய தமிழகம் பிறக்கும் என்கிறார் !  இவர்கள் இருக்கும் வரை எதுவும் பிறக்கப் போவது இல்லை.
 
தான் தான் தமிழகம்! தன்னால் தான் தமிழகம் ! என்ற அதிகாரப்பசியுடன் பேசும் ரஜினி தான் புதிய தமிழகம் பிறக்கும் என்கிறார் !  
 
காவேரி மேலாண்மை வாரியம் பற்றி வாய் திறந்தால் மோடிக்கு வலிக்குமே என்று வாயே திறக்காத ரஜினி, தான் புதிய தமிழகம் பிறக்கும் என்கிறார் !  
 
தென்னக நதிகள் இணைப்பிற்காக நூறு முறை பிரதமரை சந்தித்த அதே ரஜினி தான் புதிய தமிழகம் பிறக்கும் என்கிறார்!  
webdunia
 
பெருங்கொட்டவன் பசியைப்போல அதிகார ருசிக்காக தென்னக நதிகள் இணைப்பு என் கனவு என்கிறார். வேறு ஏதேதோ கனவு காணும் ரஜினி, தான் புதிய தமிழகம் பிறக்கும் என்கிறார் !  
 
தன்னால் பயன் அடைந்தவர்கள் தான் தனக்கு எதிராக இருக்கிறார்கள் என்று தான் ஒரே மருமகனை வைத்து  ரஜினி பேச வைக்கிறார்.
 
தமிழகத்தால் தான் ரஜினி! ரஜினியால் தமிழகம் இல்லை  என்பதை வசதியாக மறந்தவிட்டார் ரஜினி. 
 
கருணாநிதி குரல் கேட்க ஆவல் என்கிறார். ஜெயலலிதா, கருணாநிதியின் குரல்கள் ஒலித்த போது வாய் மூடி மௌனியாக இருந்தார் ரஜினி.
 
காலா அரசியல் படம் அல்ல; ஆனால் அரசியல் பேசும் என்கிறார்.
 
எதிர் மறை அரசியலை தவிருங்கள் என்று சொல்லும் காவி கலந்த அரசியல்வாதியாக  ரஜினி தெரிகிறார்.
 
மொத்தத்தில் போர்க்களத்தில் நின்றுக் கொண்டு போர் வரட்டும் பார்க்கலாம் என்று சொல்லும் 23ம் புலிக்கேசி தான் இந்த   ரஜினி.

webdunia

இரா காஜா பந்தா நவாஸ்
[email protected]

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மே 14ம் தேதி வரைவு திட்டம் தாக்கல் - மத்திய அரசு அறிவிப்பு