Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினியால் வாழ்ந்தவர்களே அவரை விமர்சிக்கிறார்கள் - போட்டுத் தாக்கிய தனுஷ்

Advertiesment
ரஜினியால் வாழ்ந்தவர்களே அவரை விமர்சிக்கிறார்கள் - போட்டுத் தாக்கிய தனுஷ்
, வியாழன், 10 மே 2018 (08:58 IST)
ரஜினிகாந்தை விமர்சித்து சிலர் பிரபலமாக நினைக்கிறார்கள் என தனுஷ் பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
அரசியலுக்கு வருகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த பின் அவர் பல விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். அவர் என்ன பேசினாலும், பேசாவிட்டாலும் அது செய்தியாகிறது. அதை வைத்து பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் ரஜினியை கடுமையாக விமர்சித்தனர். நேற்று கூட அமைச்சர் ஜெயக்குமார் ரஜினியை விமர்சித்து பேசினார்.
 
இந்நிலையில், காலா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த், ரஞ்சித், தனுஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய ரஜினிகாந்த், நதிகளை இணைப்பதே என் வாழ்நாள் கனவு. அதை செய்த பின் என் கண்கள்  மூடினாலும் பரவாயில்லை என தெரிவித்தார். 
 
அதேபோல் அந்த மேடையில் பேசிய நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் “பிரபலமானவதற்கு இரண்டு வழிகள் இருக்கிறது. கடுமையாக உழைத்து பெரிய நிலைக்கு வருவது. மற்றொன்று, அப்படி வந்தவர்களை விமர்சித்து பிரபலம் ஆவது. ரஜினியால் வாழ்ந்தவர்கள், அவரை வைத்து பணம் சம்பாதித்தவர்கள் அவரை விமர்சனம் செய்கிறார்கள். இது சங்கடமாக இருக்கிறது” எனப் பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தை கடத்தல் என நம்பி மனநோயாளி அடித்துக்கொலை - தொடரும் சம்பவங்கள்