சென்னை பிரசிடெண்ட் கல்லூரியில் கத்தியுடன் வந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
சென்னையில் கத்தியுடன் பிரசிடெண்ட் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் கல்லூரிக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து புது வண்ணாரப்பேட்டை அருகே சோதனையின் போது போலீசாரிடம் அந்த மாணவர்கள் சிக்கி உள்ளனர்.
குணா(20), ஜெனகன்(19), பாலாஜி(19), இசக்கி எட்வின் பால் ஆகிய நான்கு மாணவர்களை போலீசார் கைது செய்து கத்தியுடன் கல்லூரிக்கு செல்வது ஏன் என்பது குறித்து விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே கல்லூரி மாணவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் தற்போது படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரிக்கு செல்லும் போது கத்தி எடுத்துச் சென்றது ஏன் என்பது குறித்தும் குற்ற செயல்கள் செய்வதற்கு அவர்கள் முயற்சி செய்தார்களா என்பது குறித்தும் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.