Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேற்குவங்கத்தில் பயங்கர ரயில் விபத்து.. பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு? உதவி எண்கள் அறிவிப்பு..!

மேற்குவங்கத்தில் பயங்கர ரயில் விபத்து.. பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு? உதவி எண்கள் அறிவிப்பு..!

Siva

, திங்கள், 17 ஜூன் 2024 (11:11 IST)
மேற்குவங்க மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்தில் இதுவரை ஐந்து பேர் பலியாகி இருப்பதாகவும் 30க்கும் மேற்பட்டோர்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள நியூ ஜல்பைகுரியில், கஞ்சன்சங்கா பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் திடீரென மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்ததாகவும் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிகிறது
 
சரக்கு ரயில் மோதியதில் பயணிகள் ரயிலின் கடைசி பெட்டி தூக்கி வீசப்பட்டதாக இந்த விபத்தில் நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். மேலும் மேற்குவங்க ரயில் விபத்தில் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த உதவி எண்கள் பின்வருமாறு:
 
அவசர எண்: 13174
 
ரயில்வே உதவி எண்கள்: 03323508794 ,  03323833326
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமான விபத்தில் இறந்த துணை அதிபர்.. இறுதி ஊர்வல வாகனமும் விபத்து! – மலாவியில் சோகம்!