Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளியின் மீது பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு!

பள்ளியின் மீது பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு!

J.Durai

, புதன், 19 ஜூன் 2024 (14:32 IST)
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டம்பட்டியில் ஸ்ரீ லதாங்கி வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. 
 
இங்கு இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் (RTE) கீழ் மாணவர்கள் சிலர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அம்மாணவர்கள் ஆய்வக வகுப்புகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டுமென நிர்பந்திப்பதாகவும் கட்டணம் செலுத்தவில்லை என்றால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என குறுஞ்செய்தி அனுப்புவதாகவும் மாவட்ட நிர்வாகம் இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் மனு அளித்தனர்.அவர்கள் அளித்துள்ள மனுவில் 2022-23 கல்வி ஆண்டில் புத்தக கட்டணம் இல்லாமல் கல்வி கட்டணமாக 11,000 வசூலிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர்கள் இந்த கல்வி ஆண்டில் கல்வி கட்டணம் புத்தக கட்டணமாக 26,000 ரூபாய் செலுத்த வேண்டுமென கட்டாயப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ள அவர்கள் தற்போது RTE மாணவர்களை ஒரு வகுப்பிலும் இதர மாணவர்களை ஒரு வகுப்பிலும் அமர வைத்து பாடம் நடத்துவதாக கூறினர்.இது போன்று மாணவர்களிடம் ஏற்றதாழ்வு பார்க்கும் அப்பள்ளியின் மீது  மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
 
மேலும் DEO அலுவலகத்தை பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆந்திரா துணை முதல்வராக பொறுப்பேற்றார் பவன் கல்யாண்..!!