Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல சமூக ஆர்வலரான எலா பட் காலமானார்...

Advertiesment
ela bhatt
, புதன், 2 நவம்பர் 2022 (17:56 IST)
பத்ம பூசன் விருது பெற்ற சமூக ஆர்வலரும், பெண்கள் உரிமை ஆர்வலருமான எலா பட் இன்று காலமானார்.

கடந்த 1918 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்களா, நிறுவப்பட்ட ஒரு தொழிற்சங்கமான ஜவுளி தொழிலாளர் சங்கத்தின் ஒரு கிளையாக கடந்த 1978 ஆம் ஆண்டு SEWA என்ற அமைப்பு காந்திய மற்றும் சிவில் உரிமைகள் சங்கத் தலைவரான எலாட் பட்டால் உருவாக்கப்பட்டது.

சேவா  அமைப்பு தொழிலாளர், பெண்கள் மற்றும் கூட்டுறவு இயங்கங்களின் கலவையில் இருந்து தோன்றிய அமைப்பு என்று கூறப்படுகிறது. இந்த அமைப்பினைத் தொற்றுவித்து, செயல்படுத்தி வந்தவரும் பெண்கள் உரிமை ஆர்வலருமான எலா பட் ( 89) இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு இந்தியாவில் உள்ள சமூக ஆர்வலர்கள் பெண்ணியவாதிகள், உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி.எஸ்.பியை கான்ஸ்டபிளாக பதவியிறக்கம் செய்த உபி முதல்வர்: என்ன காரணம்?