இந்தியா மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 184 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததது. அதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில் இந்த தொடரில் இதுவரை மோசமாக விளையாடிய கே எல் ராகுல் அரைசதம் அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.
அதன் பின்னர் கோலி சூர்யகுமார் யாதவ் இணை சிறப்பாக விளையாடியது. அதிரடியாக விளையாடிய சூர்யா 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய கோலி, 44 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 184 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் பங்களாதேஷுக்கு இந்தியா ஒரு வலுவான இலக்கை நிர்ணயித்துள்ளது.