கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ரயில் சேவைகள் மெல்ல மீண்டும் தொடங்கும் நிலையில் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக சென்னையில் மின்சார ரயில்களில் ப்ரைம் நேரங்களில் பெண்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அரசு ஊழியர்கல், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குறைந்த தூரத்திற்குள்ளாக பயணிக்கும் பயணிகள் ரயிலில் டிக்கெட் கட்டணம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரயில்வேதுறை, கொரோனா காலத்தில் குறைந்த தொலைவிற்குள் அத்தியாவசியம் இல்லாமல் அதிகரிக்கும் பயணங்களை குறைப்பதற்காக சிறிதளவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும் இந்த கட்டண உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.