Publish Date: Thu, 25 Feb 2021 (10:41 IST)
Updated Date: Thu, 25 Feb 2021 (10:44 IST)
பிரதமர் மோடி தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்துள்ள நிலையில் அவரை வரவேற்று கொங்கு தமிழில் பாடல் ஒன்றை பாஜக வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இன்று கோவையில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார்.
இந்நிலையில் கோவை வரும் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக “வாங்க மோடி.. வணக்கங்க மோடி” என்ற கொங்கு தமிழில் ஒரு பாடலை பாஜகவினர் பாடி இசையமைத்து வெளியிட்டுள்ளனர். இதில் பாஜகவின் வானதி சீனிவாசனும் பாடியுள்ளார். பிரதமர் மோடி பங்குபெரும் தேர்தல் பரப்புரை கோவை கொடிசியா அருகே நடைபெற உள்ளது.