Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டர்களில் கட்சிக் கொடி.! விஜயின் மாஸ்டர் ப்ளான்..!!

Senthil Velan
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (15:45 IST)
கோட்' திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் கட்சி கொடியேற்றி கொண்டாட விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.
 
நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி  தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். தவெகவின் முதல் மாநாட்டை மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் நடத்த விஜய் தரப்பினர் திட்டமிட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தப்போவதாகவும் அதற்கு முன்னர் தவெகவின் கொடியை விஜய் அறிமுகம் செய்வார் எனவும் கூறப்பட்டது.  
 
மேலும் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்த பிறகு, அனைத்து பகுதிகளிலும் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. தவெக கொடியில் உள்ள நிறங்கள், மற்றும் வாகை மலர் இடம்பெறுவது குறித்து விஜய் தரப்பில் ஆலோசனைகள் நடைபெற்று வந்தது.  நேற்று நடிகர் விஜயின் தவெக கட்சியின் கொடி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. அந்த கொடியில் மஞ்சள் நிறத்தில் விஜயின் முகத்துடன் கட்சி கொடி  காட்சியளிக்கிறது.   
 
இந்நிலையில் நாளை மறுநாள் (22ஆம் தேதி) தமிழக வெற்றி கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்வார் என தகவல் வெளியானது.  விஜய் ஏற்றவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும் என சொல்லப்படுகிறது. 

ALSO READ: அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் மீண்டும் நீட்டிப்பு.! ஆக.27 வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு.!!
 
இதனிடையே அடுத்த மாதம் 'தி கோட்' திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் கட்சி கொடியேற்றி கொண்டாட விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். தியேட்டருக்கு வரும் சுமார் ஐம்பது லட்சம் மக்களிடம் கட்சி கொடியை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே விஜயின் மாஸ்டர் பிளான் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பது எங்கே? பாலச்சந்திரன் பேட்டி..!

தமிழ்நாட்டில் வேர்க்கடலை பயிரிட குஜராத்தில் விதைகளை வாங்கும் விவசாயிகள் - என்ன காரணம்?

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

அடுத்த கட்டுரையில்
Show comments