Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 17 April 2025
webdunia

இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்-நிகிலா- விஜய்- விபிதா நடித்துள்ள படம் ’டோபமைன் @ 2.22’!

Advertiesment
Dopamine

J. Durai

, திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (18:21 IST)
திரவ்  இயக்கி  முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ள படம் .‘டோபமைன்@ 2.22' 
 
இந்த படம் பற்றி இயக்குநர், நடிகர் திரவ் பகிர்ந்துகொண்டதாவது......
 
’டோபமைன் @ 2.22’ படத்தின் கதை வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த ஏழு பேரைச் சுற்றி வருகிறது. அவர்களின் வாழ்க்கை இன்னும் நடக்காத ஒரு கொலையால் இணைக்கப்படுகிறது
 
அந்த சமயத்தில் அவர்களின் உணர்வுகள் மற்றும் ஒரு விஷயத்திற்கு அடிமையாதல் பற்றிய கதையாக இது நகரும். 18-20 நாட்களில் முழுப் படப்பிடிப்பையும் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் படமாக்கி முடித்துள்ளோம். ‘குட்நைட்’, ‘லவ்வர்’ படங்கள் புகழ் நிகிலா ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்- சீசன்3’யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜய் டியூக், யூடியூப் தொடரான, ‘ஷாலினி ஸ்டோர்’ மூலம்  அறியப்பட்டவர். அவரும் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் ‘குற்றம் கடிதல்’ புகழ் சத்யா நடித்துள்ளார். விபிதா, சதீஷ், சாம்சன் மற்றும் ’நூடுல்ஸ் படத்தில் நடித்த மாஸ்டர் சக்திவேலன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
 
படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் திறமையால் படத்தை சிறந்ததாக உருவாக்கியுள்ளனர். 
 
குறிப்பாக, க்ளைமாக்ஸில் இடம்பெறும் பாடல் அனைவரையும் பிரதிபலிக்கும் மற்றும் தொடர்புபடுத்தும் வகையில் கபில் கபிலன் அதை பாடியுள்ளார். படத்தில் இடம்பெறும் ஆங்கிலப் பாடல் ஒன்றை ’கைதி’, ‘லியோ’ புகழ் சரண்யா கோபிநாத் பாடியிருக்கிறார். 
 
ஆலன் ஷோஜி படத்திற்கு இசையமைக்க, பிருத்வி ராஜேந்திரனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு மற்றும் பாடல் வரிகளை திரவ் கையாண்டுள்ளார். ஆனந்த் ராமச்சந்திரன் மற்றும் கிஷோர் காமராஜ் ஆகியோர் ஒலிப்பதிவிலும் பப்ளிசிட்டி டிசைனில் தினேஷூம் பணியாற்றியுள்ளனர்சுரேஷ் சந்திரா மற்றும் அப்துல் நாசர் இந்த படத்திற்கான மக்கள் தொடர்பு பணிகளை கவனிக்கின்றனர் என்று தெரிவித்தார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘மனோரதங்கள்’ வெளியீட்டு விழாவில்,நட்சத்திர நடிகர் மோகன்லால் கலந்து கொண்டார்!