Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரேமலதாவை நேரில் சந்தித்த விஜய்! கேப்டன் கேமியோ உறுதி? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

பிரேமலதாவை நேரில் சந்தித்த விஜய்! கேப்டன் கேமியோ உறுதி? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Prasanth Karthick

, திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (19:53 IST)

விஜய்யின் ‘தி கோட்’ படத்தில் விஜயகாந்த் கேமியோ உள்ளதா என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் இன்று பிரேமலதா விஜயகாந்தை, நடிகர் விஜய் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

 

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து தயாராகியுள்ள படம் ‘தி க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. இந்த படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், ஸ்னேஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வைரலாக இருந்து வருகிறது

 

மறைந்த கேப்டன் விஜயகாந்த் இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக கேமியோ ரோலில் கொண்டுவரப்படுகிறார் என ஆரம்பம் முதலே பேச்சுகள் இருந்து வருகிறது. ட்ரெய்லர் வெளியீட்டுக்கு பின் பத்திரிக்கையாளர்களுக்கு வெங்கட் பிரபு பேட்டிக் கொடுத்தபோதும் அந்த கேமியோ விவரங்களை, ‘இருக்கலாம்’ என்று மழுப்பலாகவே பதில் அளித்தார்.

 

இந்நிலையில் இன்று நடிகர் விஜய், விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக கட்சி பொதுச்செயலாளருமான பிரேமலதாவை நேரில் சென்று சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருடன் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோரும் சென்றதாக கூறப்படுகிறது.

 

மறைந்த விஜயகாந்தை படங்களில் ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்துவதற்கு தங்கள் அனுமதியை பெற வேண்டும் என பிரேமலதா முன்னரே அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனாலேயே தற்போது படக்குழு அனுமதி பெறுவது தொடர்பாக சந்தித்துள்ளதாகவும், கோட் படத்தில் விஜயகாந்த் கேமியோ உறுதி ஆகியுள்ளதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா!