தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும், அந்த மழை நவம்பர் 4 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட 45 சதவீதம் அதிகமாக பெய்தது என்றும் அதேபோல் வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கி இயல்பைவிட அதிகமாக பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
சிட்ரங் புயல் உருவானது தான் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கி உள்ளது என்றும் வழக்கமாக அக்டோபர் இரண்டாவது வாரத்திலேயே வடகிழக்கு பருவமழை தொடக்குவது வழக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
நாளை முதல் பருவ மழை தொடங்கும் என்றும் படிப்படியாக நவம்பர் 4-ஆம் தேதிக்குப் பிறகு பருவமழை அதிகரிக்கும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்