தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
தமிழக பகுதிகளில் மேல் அளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும் இதனை அடுத்து இன்னும் மூன்று நாட்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் அப்போது இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் குடிநீர் ஆதாரங்களான ஏரிகள் குளங்கள் நிரம்ப வேண்டுமென்றால் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக வடகிழக்கு பருவமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.