Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர தீபாவளிக்குள் சென்னையில் 5ஜி சேவை! – முகேஷ் அம்பானி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (14:41 IST)
இந்தியா முழுவதும் 5ஜி சேவைகளை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வரும் ஜியோ சென்னையில் தீபாவளிக்குள் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் 4ஜி சேவைகள் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் அடுத்ததாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, சமீபத்தில் நடந்த 5ஜி அலைக்கற்ற ஏலத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன், அதானி நிறுவனம் உள்ளிட்டவை 5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் பெற்றுள்ளன.

இந்நிலையில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் வேகமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த ரிலையன்ஸ் மாநாட்டில் பேசிய முகேஷ் அம்பானி “இந்த ஆண்டு தீபாவளிக்குள் இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, சென்னை, மும்பை ஆகிய மெட்ரோ நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும்.

தொடர்ந்து 2023ம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் இந்தியா முழுவதும் உள்ள நகரங்கள், தாலுக்காக்களில் 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும். உலகின் அதிவேக இணையசேவையை ஜியோ பயனாளர்களுக்கு வழங்க உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுக்குநூறான ஹெலிகாப்டர்.. குடும்பத்துடன் பரிதாபமாக பலியான தொழிலதிபர்! - கடைசி வினாடி திக் திக் வீடியோ!

தமிழிசை வீட்டிற்கு திடீரென சென்ற அமித்ஷா.. பாஜக தலைவர் பொறுப்பு அளிக்கப்படுமா?

கனிமொழி கண்டனம் தெரிவித்த சில நிமிடங்களில்.. பொன்முடி பதவி பறிப்பு..!

டிரம்ப் வரிவிதிப்பு ஒத்திவைப்பு எதிரொலி: இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஏற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments