Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனித்தீவில் பிரம்மாண்டமான பங்களா! – மகனுக்கு அம்பானியின் அசத்தல் கிஃப்ட்!

Advertiesment
Anand Ambani
, ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (10:33 IST)
தனது மகனுக்கு பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி பெரிய பங்களா ஒன்றை பரிசாக வாங்கியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் வைரலாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள பிரபல பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருக்கு சொந்தமான பல நிறுவனங்கள் உலகம் முழுவதும் பல கோடிகளில் வணிகம் செய்து வருகின்றன.

இந்நிலையில் தன் இளைய மகனுக்காக அசத்தல் பரிசு ஒன்றை வாங்கியுள்ளாராம் அம்பானி. இளைய மகன் ஆனந்த் அம்பானிகாக துபாயில் உள்ள பிரபலமான பால்ம் ஜுமேரியா தீவில் ஆடம்பரமான மாளிகை ஒன்றை வாங்கியுள்ளார்.

33 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த பங்களாவில் 10 படுக்கை அறைகள், 7 ஸ்பாக்கள், 2 நீச்சல் குளங்கள் என சகல வசதிகளும் உள்ளதாம். இந்த மாளிகையின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.639.67 கோடி என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா, தினகரனை நேரில் அழைப்பேன்: ஓ பன்னீர்செல்வம்