Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துபாய் புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

Advertiesment
துபாய் புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
, சனி, 27 ஆகஸ்ட் 2022 (09:07 IST)
சென்னையிலிருந்து துபாய் புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து துபாய்க்கு இண்டிகோ விமானம் ஒன்று 160 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை 7.40 மணியளவில் புறப்பட இருந்தது.

இந்நிலையில் துபாய் செல்லும் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக விமான கட்டுப்பாட்டு மையத்திற்கு போன் வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக விமானத்திலிருந்து பயணிகளை வெளியேற்றிய பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேசமயம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரையும் ட்ரேஸ் செய்துள்ளனர். அதில் வெகுண்டு மிரட்டல் விடுத்தவரின் குடும்பமும் அந்த விமானத்தில் பயணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓணம், புரட்டாசி பூஜை தரிசனம்..! ஆன்லைனில் முன்பதிவு! – சபரிமலை நிர்வாகம் அறிவிப்பு!