Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிச்சு வெளுக்க போகுது மழை: இனி ஜில் ஜில் க்லைமேட் தான்!!

Webdunia
சனி, 11 ஜூலை 2020 (11:07 IST)
பல்வேறு மாவட்டங்களில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருவது காலை பொழுதுகளை குளுமையாக்கி வருகிறது. 
 
தமிழ்நாட்டில் ஜூலை 13 ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
 
குறிப்பாக நேற்று இரவில் சென்னையில் பல இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. அதே வேளையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை கொட்டித் தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
அதன்படி திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், திண்டுக்கல், பெரம்பலூர், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட வட மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மழை பெறும். 
 
அதேபோல சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய கூடும். 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments