Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஎஸ்இ போல தமிழக பாடத்திட்டத்தில் பாடங்கள் குறைக்கப்படுமா?

Webdunia
சனி, 11 ஜூலை 2020 (10:41 IST)
சிபிஎஸ்இ போல தமிழக பாடத்திட்டத்தில் பாடங்கள் குறைக்கப்படுமா என அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். 
 
கொரோனா லாக்டவுன் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால், 30% பாடங்கள் குறைக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்தது. அதன்படி இதேபோல சிபிஎஸ்இ போல தமிழக பாடத்திட்டத்தில் பாடங்கள் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, அரசுபள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வழியாக அல்லாமல், தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்த அரசு முடிவு செய்துள்ளது, மேலும், தமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு செய்யப்படும் என்றார். 
 
அதோடு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயில உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாத பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் வரும் ஜூலை 15 ஆம்  தேதிவழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா.. விஜய் கலந்து கொள்வதால் திருமாவளவனின் அதிரடி முடிவு,..!

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம்: ஆனந்தகுமாரின் மனைவியும் கைது..!

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. முழு விவரங்கள்..!

இன்று காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல்: கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு சாதகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments