Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இவ்ளோ பட்டும் அதிமுக அரசு பாடம் கற்கவில்லை! – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Advertiesment
இவ்ளோ பட்டும் அதிமுக அரசு பாடம் கற்கவில்லை! – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
, வியாழன், 26 நவம்பர் 2020 (15:40 IST)
தமிழகத்தில் நிவர் புயலால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக அரசு சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று இன்று அதிகாலை கரையை கடந்த நிலையில் பல மாவட்டங்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தும், தண்ணீர் சாலைகளில் தேங்கியும் உள்ள நிலையில் மீட்பு பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில் முன்னதாக புயல்களால் தமிழகம் பாதிக்கப்பட்டபோதும் அதிமுக அரசு அதிலிருந்து பாடம் கற்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “2015 பெருவெள்ளம் - பேரிடர்களிலிருந்து அதிமுக அரசு பாடம் கற்கவில்லை! CAG அறிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை. நீதிமன்றத் தீர்ப்பும் கடைப்பிடிக்கப்படவில்லை. அதிமுக அரசின் மெத்தனத்தால் இழப்பைச் சந்தித்திருக்கும் அனைத்து தரப்பினருக்கும் உடனடி உதவியாக ரூ.5000 வழங்கிடுக!” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூட்டானின் சாக்டெங் வனவிலங்கு சரணாலயத்துக்கு சீனா ஏன் உரிமை கோருகிறது?