Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெரினாவில் கூடிய கூட்டம்: விரட்டியடிக்கப்பட்ட துயரம்!

மெரினாவில் கூடிய கூட்டம்: விரட்டியடிக்கப்பட்ட துயரம்!
, வியாழன், 26 நவம்பர் 2020 (12:08 IST)
நிவர் புயலுக்குப் பிறகு  மெரினா கடற்கரையை பார்க்க வந்தவர்கள் விரட்டியடிப்பு. 
 
கடந்த 2 நாட்களாக தமிழகம் மற்றும் புதுவை மக்களை பயமுறுத்தி கொண்டிருந்த நிவர் புயல் இன்று அதிகாலை 2 மணிக்கு முழுவதுமாக கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்க 4 முதல் 5 மணி நேரம் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.     
 
தற்போது இந்த புயல் ஆந்திரப்பிரதேசம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடந்தபோதிலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
இந்நிலையில் நேற்று மெரினா கடற்கரையை கடல் நீரும், மழை நீரும் ஒன்று சேர சூழ்ந்தது. புயல் நீரால் மெரினா கடற்கரை மூழ்கியுள்ளதை கண்டு மக்கள் பெரும் அச்சம் அடைந்தனர். ஆனால் இப்போது நீர் வற்றியுள்ளதால் கடற்கரை கொஞ்சம் தெரிந்துள்ளது. 
 
ஏற்கனவே ஊரடங்கு காரணமகா மெரினாவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கடல் சீற்றத்துடன் இருப்பதாலும் மெரினா கடற்கரையை பார்க்க வந்தவர்கள் விரட்டியடிக்கபப்ட்டனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு குறைப்பு!