Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏதாவது பேசணுமேன்னு ஸ்டாலின் பேசறார்! – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

Advertiesment
ஏதாவது பேசணுமேன்னு ஸ்டாலின் பேசறார்! – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!
, செவ்வாய், 5 மே 2020 (15:09 IST)
நெடுஞ்சாலை அமைக்கும் ஒப்பந்தத்தில் அரசு ஊழல் செய்ததாக எதிர்கட்சி தலைவர் குற்றம் சாட்டுவது ஆதாரமற்றது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலை துறை அமைச்சராகவும், முதலமைச்சராகவும் பதவி வகிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊரடங்கு காலத்திலும் டெண்டர் விடுவதில் பிஸியாக இருப்பதாகவும், 32 ஒப்பந்ததாரர்கள் செய்ய வேண்டிய வேலையை ஒரு ஒப்பந்ததாரருக்கு வழங்கியுள்ளதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் ”ஒப்பந்த புள்ளி தொடர்பாக திமுக கட்சியை சார்ந்த ஒப்பந்ததாரர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கிற்கு முகாந்திரம் எதுவும் இல்லை என ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனா எதிர்கட்சி தலைவர் உண்மைக்கு புறம்பான கருத்துகளை தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.

மேலும் “வழக்கை இழுத்தடிக்க அரசு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடலாம்’ என்று மு.க.ஸ்டாலின் ஆரூடம் தெரிவித்திருப்பது அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தை காட்டுகிறது. தங்கள் கட்சியின் இருப்பை காட்டி கொள்வதற்காக ஏதாவது பேசுகிறார் எதிர்கட்சி தலைவர்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே தெருவில் 70 பேருக்கு கொரோனா: ஐஸ் ஹவுஸ் பகுதியில் பீதி!