மதுக்கடை திறப்பப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
ஒரு மாததிற்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்த மதுக்கடைகள் தமிழ்நாட்டில் வரும் 7 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 7 மணி நேரம் செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
கள்ள சாரயத்தை ஒழிக்கவும், மக்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று மது வாங்குவதை தடுக்கவும் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கும் முடிவு அரசு மனமுவந்து எடுத்த முடிவல்ல என அரசு தரப்பில் டாஸ்மாக் திறக்கப்படுவதற்கான காரணம் என்னவென விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கவிஞர் வைரமுத்து இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்....
மது என்பது - அரசுக்கு வரவு; அருந்துவோர் செலவு.
மனைவிக்குச் சக்களத்தி; மானத்தின் சத்ரு.
சந்தோஷக் குத்தகை; சாவின் ஒத்திகை.
ஆனால், என்ன பண்ணும் என் தமிழ்
மதுக்கடைகளின் நீண்ட வரிசையால் நிராகரிக்கப்படும்போது?