Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் சில பகுதிகளில் மீண்டும் லேசான மழை!

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2023 (07:59 IST)
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தொடர்ந்து 30 மணிநேரத்துக்கும் மேலாக கோரத்தாண்டவம் ஆடிய மிக்ஜாம் புயலால் சென்னை தன்னுடைய இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளது.  புயல் கரையைக் கடந்து 2 நாட்களுக்கு மேலானாலும் இன்னமும் சென்னையின் சில பகுதிகளில் வெள்ள நீர் வடியவில்லை. வடசென்னை பகுதிகள், வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் இன்னமும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியுள்ள நிலையில் இன்று காலை சென்னையின் அரும்பாக்கம், ஷெனாய் நகர், கீழ்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

இந்த மழை பயப்படும் படியான அளவுக்கு அதிகமான மழையாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இன்று தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 ஆண்டுகளுக்கு பிறகு லாபத்தில் பிஎஸ்என்எல்.. ஒரே காலாண்டில் எத்தனை கோடி லாபம்?

மாநிலங்களவையில் நிறைவேறியது வக்ஃப் சட்டத் திருத்த மசோதா.. அதிமுக எதிர்த்து வாக்களிப்பு..!

வக்பு வாரிய மசோதாவுக்கு விஜய் கண்டனம்.. காரசாரமான அறிக்கை..

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

அடுத்த கட்டுரையில்
Show comments