Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2023 (07:49 IST)
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என்று கடந்த வாரத்தில் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதையடுத்து தொண்டர்கள் பதற்றமான நிலையில் விஜயகாந்த் உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும் தொண்டர்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதையடுத்து நடிகர்கள் சங்கம் சார்பாக நடிகர் நாசர் மருத்துவமனைக்கு சென்று வந்த பின்னர் விஜயகாந்த் நலமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து விஜயகாந்தோடு பயணித்த பல கலைஞர்கள் அவர் உடல்நலம் பெற வேண்டி பிராத்தனை செய்வதாக ட்வீட் செய்தனர்.

தொடர்ந்து விஜயகாந்த் உடல்நலம் பற்றி பல்வேறு விதமான தகவல்களும், வதந்திகளும் பரவின நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேமுதிக தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments