Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிக்ஜாம் புயல் பாதிப்பு: எடுத்த நடவடிக்கைகள் என்ன? -தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தகவல்

Advertiesment
chennai
, வியாழன், 7 டிசம்பர் 2023 (18:21 IST)
மிக்ஜாம் புயல் சென்னை புரட்டி எடுத்துள்ள நிலையில், இதனால் ஒட்டுமொத்த சென்னை மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை தக்க சமயத்தில் பேரிடர் மீட்பு படையினரும், போலீஸாரும் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.

இந்த நிலையில் சென்னையில் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்துள்ளார்

அதில், கடந்த 24 மணி நேரத்தில் மீட்பு பணிகளில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ஒரு சில பகுதிகளை தவிர 95 சதவீதம் சரி செய்யப்பட்டுள்ளது.

18780 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது சென்னையில் 343 இடங்களில் தண்ணீர் அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

‘’சென்னையில் 3 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் களத்தில் உள்ளதாகவும், ஒரு சில பகுதிகளில் மின்இணைப்பு சரி செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தழ்வான பகுதிகளில் தண்ணீரை முழுமையாக வெளியேற்றிய பிறகு மின் இணைப்பு சீரமைக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் 22 -ல் 20 திறக்கப்பட்டுள்ளது, இன்றிரவுக்குள் மீதமுள்ளவைகள் சரிசெய்யப்படும் எனவும், நடமாடும் பால், காய்கறி கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று 50 வாகனங்களும், நாளை 150 வாகனங்களும் இயக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று இரவு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்..!