Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல ஆண்களுடன் உறவு : தீர்த்துக்கட்டிய கள்ளக்காதலன் (வீடியோ)

Advertiesment
பல ஆண்களுடன் உறவு : தீர்த்துக்கட்டிய கள்ளக்காதலன் (வீடியோ)
, செவ்வாய், 2 ஜனவரி 2018 (13:09 IST)
பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்த கரூரை சேர்ந்த பர்வீன் பானு என்ற பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
கருர் மாவட்டம் ஏமூர் நடுப்பாளையத்தை சேர்ந்த இளையராஜா மனைவி பர்வீன்பானு. காதல் திருமணம் செய்து கொண்ட  இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. 
 
அந்நிலையில், பர்வீன்பானு கடந்த 2015 ஜூன் 23ம் தேதி வீட்டில் இருந்தவர் திடீரென்று காணவில்லை. இதையடுத்து, பர்வீன் பானுவின் கணவர் இளையராஜா, ஜூன் 24ம் தேதியன்று, வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜசேகரன் உத்தரவின்படி தனிப்படை போலீசார் கரூர் பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அழகுராம், நெப்போலியன் மற்றும் போலீஸார், காணாமல் போன  பர்வீன் பானுவின் செல்போன் தொடர்பை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 
 
இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு  சென்னை பெருங்குளத்தூரில் மாணிக்கம் என்ற ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பர்வீன்பானுக்கும் இவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இந்நிலையில் தனக்கு தெரியாமல் பர்வீன்பானு வேறு சிலருடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்ததாகவும், இதை தட்டிக் கேட்டபோது மாணிக்கத்தின் பேச்சை மீறி சென்றதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த மாணிக்கம் 2016 ல் வீட்டில் இருந்த சுடிதார் துணியில் பர்வீன் பானுவின் கழுத்தை நெறுக்கி கொலை செய்து, தனது நண்பர் ராஜா என்பவர் துணையுடன் அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வீசியதும் தெரிய வந்தது.
 
அதன்பின், உடல் மேலே வந்து விடும் என்ற பயத்தில் இவர்களின் நண்பர் கிஷோர் என்பவர் ஆலோசனைப்படி பர்வீன் உடலை கிணற்றில் இருந்து வெளியே எடுத்து கல்லில் கட்டி மீண்டும் அதே கிணற்றில் போட்டுள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் மாணிக்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. 
 
இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத் தனிப்படை போலீசார் இரண்டு நாட்களுக்கு முன்பு செல்போன் பயன்பாட்டை வைத்து மாணிக்கம், ராஜா மற்றும் கிஷோர் ஆகிய 3 பேர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பின், பிரவீன் பானுவின் உடலை கிணற்றில் இருந்து எடுத்து பிரேத பரிசோதனை செய்து பின்பு தீவிர விசாரணையை முடிக்கி விடப்பட்ட நிலையில்., இந்த மூவரையும் சென்னையில் கைது செய்ததோடு கரூர்  குற்றவியல் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர். 
 
இந்த மூவரையும் 15 நாட்கள் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் பிரவீன் பானு தனுக்கு பிடித்த ஆண்களுடன் உறவு வைத்துக் கொண்ட நிலையில், புகைப்படத்தில் காண்பதை விட நேரில் மிகவும் அழகாக இருப்பதினால், ஆங்காங்கே இந்த பெண்மணி அவருக்கு பிடித்தவருடன் செல்வதால் தான் இந்த கொலை என்பது குற்றப்பிண்ணனியில் தெரியவருகின்றது. 
 
மேலும் இவர் பார்த்த ஆண்களுடன் பழகியதால் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொண்டு ஒரு வாரம், ஒரு மாதக்கணக்கில் வாழ்ந்து பின்பு கழட்டி விட்டு வாலிபர்களை ஏமாற்றி வருவதை பழக்கமாக வைத்திருந்தார். இதுவரைக்கும் சுமார் 28 வாலிபர்களை அவர் திருமணம் செய்திருந்தார் என்பது தெரிய வந்துள்ளது. 
 
கடந்த 2015 ம் ஆண்டு காணாமல் போன பெண்மணி ஒருவர்,  2016 ல் கொலை செய்யப்பட்டு, அந்த கொலையை கரூர் போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில், 2017 ம் ஆண்டின் இறுதிக்குள் கண்டறியப்பட்டு, 2018ம் ஆண்டு தொடக்கத்தின் அதாவது ஆண்டுப்பிறப்பில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சி.ஆனந்தகுமார் - கரூர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை; பெற்றோர் எடுத்த் விபரீத முடிவு