Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை; பெற்றோர் எடுத்த விபரீத முடிவு

Advertiesment
பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை; பெற்றோர் எடுத்த விபரீத முடிவு
, செவ்வாய், 2 ஜனவரி 2018 (13:04 IST)
சென்னை ஐய்யப்பன்தாங்கலில் வயதான தம்பதியினர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   
சென்னை போரூரையடுத்த ஐய்யபந்தாங்கலில் வசித்து வந்தவர் மனோகரன். இவரது மனைவி ஜீவா. இவர்களின் பிள்ளைகளுக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில் தங்களின் பிள்ளைகளுக்கு  பாரமாக இருக்க விரும்பவில்லை என கடிதம் எழுதிவைத்துவிட்டு, தங்களின் இறுதிச் சடங்கிற்காக 2 லட்சம் ரூபாயையும் வைத்துவிட்டு, தம்பதியினர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 
 
பெற்றோர்கள் ஒருபோதும் தங்களின் குழந்தைகளை பாரமாக கருதுவதில்லை. அவர்களை பெரும்பாடு பட்டு படிக்க வைத்து, நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து திருமணம் செய்து வைக்கின்றனர். இதனை சற்றும் புரிந்து கொள்ளாத சிலர் தங்களின் பெற்றோரை பாரமாக கருதுகின்றனர். இதனால் விரக்தியின் எல்லைக்கு தள்ளப்படும் பெற்றோர்கள் இதுபோன்ற முடிவுக்கு தள்ளப்படுகிறர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவாகரத்து தர மறுத்த மனைவியை கொடூரமாகத் தாக்கிய கணவன்