Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதநேயத்திற்கு உயிரோட்டம் கொடுக்கும் வகையில் இஸ்லாமியர்களின் இரத்த தான நிகழ்ச்சி

Webdunia
திங்கள், 30 ஏப்ரல் 2018 (16:22 IST)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாமில் 100- க்கும் மேற்பட்ட  இஸ்லாமியர்கள்  ரத்ததானம் செய்தனர்.



கரூரை  அடுத்த  வெங்கமேடு  பகுதியில் செயல்படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கிளை அமைப்பும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையும் இணைந்து  கரூர் நகராட்சிக்குட்பட்ட மேட்டுத்தெரு பகுதியில் உள்ள தனியார் அரங்கில்  நடத்திய ரத்ததான முகாம் நடைபெற்றது.  

இந்த முகாமை கரூர் நகர காவல் ஆய்வாளர் பிரித்திவிராஜ் துவக்கி வைத்து அவரும் ரத்த தானம் செய்தார். காஷ்மீரில் சிறுமி கற்பழித்து கொலை செய்த விவகாரத்திற்கு பிறகு, அவர்கள் இஸ்லாமியர்கள் தானே என்ற அளவிற்கு கொண்டு சென்றுள்ளனர். இஸ்லாமியர்களும் மனித நேயம் உள்ளவர்கள் தான் என்பதை மீண்டும் உறுதிபடுத்தவே  ஆண்டு  தோறும்  ரத்ததானம் செய்து வருவதாகவும்.,  கடந்த 13 ஆண்டுகளாக இந்த ரத்ததானம் முகாமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் நிர்வாகிகள் செய்து வருவதாக இந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் 100-க்கும்மேற்பட்ட  இஸ்லாமியர்கள் ரத்ததானம் செய்தனர்.

பேட்டி : மாதர்ஷா பாபு – தலைவர் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – கரூர் மாவட்டம்

 

 
சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர்ந்து கொண்டே வந்த தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

வில்லிவாக்கம் பகுதியில் மெட்ரோ பணி.. பேருந்து நிறுத்தங்களில் மாற்றங்கள்..!

கர்ப்பிணி பெண் என்றும் பாராமல்..! பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட கொடூரம்! - வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!

டீப்சீக் ஏஐ-க்கு தென் கொரியா விதித்த கட்டுப்பாடு.. டேட்டாக்கள் கசிகிறதா?

ஆண்டுக்கு இவ்வளவு கட்டினா போதும்.. சுங்கச்சாவடிகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம்! - மத்திய அரசு புதிய திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments