Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீரை திருடி தமிழ்நாடு செய்திதாள் நிறுவனத்துக்கு சப்ளை செய்த டேங்கள் லாரிகள் சிறைபிடிப்பு!

Advertiesment
நீரை திருடி தமிழ்நாடு செய்திதாள் நிறுவனத்துக்கு சப்ளை செய்த டேங்கள் லாரிகள் சிறைபிடிப்பு!
, வியாழன், 19 ஏப்ரல் 2018 (20:01 IST)
தனியார்  தோட்ட போர்வேல்களில் இருந்து நீரை உறிஞ்சி டேங்கர் லாரிகளில் நிரப்பி தமிழ்நாடு செய்திதாள் நிறுவனத்திற்கு தண்ணீரை விற்பனை செய்யும் 50க்கும் மேற்பட டேங்கர் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


கரூரை அடுத்த வேலாயுதம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு செய்திதாள் நிறுவனம்(டி.என்.பி.எல்.) செயல்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு காவிரி ஆற்று பகுதியில் இருந்து தண்ணீர் எடுத்து ஆலை இயங்கி வருகிறது. தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லை.

இதனால் ஆலையை இயக்குவதற்க்காக தனியார் டேங்கர் லாரிகளில் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் டேங்கர் லாரிகள் ஈடுபட்டு வருகிறது. இந்த லாரிகள் நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே சோழசிராமணி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்களில்  இருந்து  30-க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீரை எடுத்து வருகின்றனர்.
 அதேபோல்  கரூர் மாவடத்தில் வேலாயுதம்பாளையம் நல்லியாம்பாளையம் சுற்றுவட்டார காவிரி கரையோர பகுதிகளில் உள்ள தனியார் போர்வெல்களிலும் தண்ணீரை எடுத்து வந்து தண்ணீரை விநியோகம் செய்யும் பணியில் 20-க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கி வருகிறது. 
நாள் ஒன்றிற்கு ஒவ்வொரு லாரிகளிலும் 4-முதல் 5-முறை வரை தண்ணீர் விநியோகம் செய்கிறார்கள்.

குடிநீருக்காக உள்ள ஆதரத்தையும் இவர்கள் சிதைத்து வருகின்றனர் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் காவிரி பாதுகாப்பு இயக்கத்தினர் 50-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

மேலும் முறையான அனுமதி இல்லாமல் இயக்கப்படும் டேங்கர் லாரிகள் மீது உரிய நடவடிக்கை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் காகித ஆலை இயக்குவதற்கு தேவையான நீரை மாற்று ஏற்பாடுகள் செய்து பெறப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இச்சம்வம் அறிந்த வேலாயுதம் பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்

    - கரூர் அனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையில் சோகம்: ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பலி