Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நம் அகத்துக்குள் அறிவின் அகல்! – கமல்ஹாசன் ஆசிரியர்கள் தின வாழ்த்து!

Advertiesment
Tamilnadu
, ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (10:27 IST)
இன்று நாடு முழுவதும் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும், ஆசிரியருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5 இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல அரசியல் கட்சி தலைவர்களும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் “நம் அகத்துக்குள் அறிவின் அகல் ஏற்றும் அரும்பணியை மனமுவந்து ஏற்றுக்கொண்டவர்கள் ஆசிரியர்கள். கற்றுத் தருவதனைத்தூறும் அறிவினர்க்கு என் வணக்க வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 42 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு! – இந்திய நிலவரம்!