தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் வாக்காளார் பட்டியல் திருத்த பணி உள்ளிட்டவற்றை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் பல ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இன்று 9 மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களோடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கான முக்கிய முடிவுகள் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.