Publish Date: Sat, 04 Sep 2021 (23:25 IST)
Updated Date: Sat, 04 Sep 2021 (23:28 IST)
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 வது டெஸ்ட் தொடரில் இந்தியா 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 வது டெஸ்ட் போட்டில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முதல் இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணிக்கு ரோஹித்,புஜாரா சிறப்பாக ரன் சேர்த்தனர். ரோஹித் சதம் அடித்து 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில்92 ஓவர்களில் 3 விக்கெட் வி இழப்பிற்கு இந்திய அணி 270 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 22, ஜடெஜா 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர். மேலும் இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.