Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி , விஜய் படங்களின் சாதனையை முறியடிக்கும் கமல்?

Advertiesment
ரஜினி , விஜய் படங்களின் சாதனையை முறியடிக்கும் கமல்?
, செவ்வாய், 14 ஜூன் 2022 (22:01 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நடித்து தயாரித்த படம் விக்ரம். இப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலை குவித்துள்ளது.

 லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் மிகப்பெரிய வெற்றியைப்  பெற்றுள்ளது.

இந்த நிலையில், விக்ரம் படம் 7 நாட்களில் ரூ.250 கோடிக்கு மேல் வ்சூலித்துள்ள நிலையில், இப்படத்தின் வெற்றி குறித்து ரசிகர்களுக்கும் மக்களுக்கும் கமலஹாசன் நன்றி தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் வெற்றிக்கு சமீபத்தில் கமல் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், இந்த பிரமாண்ட வெற்றியை எனக்குப் பரிசளித்த என் தொப்புட்கொடி உறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். சிறந்த படங்கள் மூலம் உங்களை எண்டர்டெயயிண்ட் செய்வேன் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தென்னிந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த படங்களில் பட்டியலில்  விக்ரம் படம் முதல் 10 படங்களைப் பிடித்துள்ளது,.

அதில், பாகுபலி 1-2, ஆர்,.ஆர்.ஆர். கேஜிஎஃப் ஆகிய படங்களும், பிரபாஸில் சாஹோ, புஷ்பா, பகில் ஆகிய படங்களுக்கு  அடுத்ததால கமலின் விக்ரம் படம் சுமார் 11  நாட்களில் 200 கோடிக்கு மேல் வசூலீட்டியுள்ளது. இப்படம் இன்னும் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் ரூ.400 வசூல் குவிக்கும் எனக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?