Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்த பிரபல தெலுங்கு நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன்  இணைந்த பிரபல தெலுங்கு நடிகர்
, வெள்ளி, 10 ஜூன் 2022 (18:04 IST)
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது  நெல்சன் இயக்கத்தில் ரஜினி169 படத்தின் நடித்து வருகிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் பீஸ்ட்  பட ரிலீஸுக்கு பின் இப்படத்தின் கதை விவாதத்தின் போது, நெல்சன் சொன்ன கதை ரஜினிக்குப் பிடிக்கைவ்ல்லை என தெரிகிறது.

இதனால், முத்து, படையப்பா, போன்ற படங்களை இயக்கிய கே.எஸ். ரவிக்குமார் இப்படத்தின் திரைக்கதை எழுக் கூறியுள்ளதாகவும் அதன்படி அவர் இப்படத்தின் திரைக்கதை எழுதி வருவதாகவும் அதனால் ஷூட்டிங் தள்ளிபோவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ரஜினியின் 169 வது படத்தின் முக்கிய அப்டே வெளியாக்யுளது, இதில், எந்திரன் படத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா இப்படத்தில் ரஜினிக்கு ஹீரோயினாக நடிப்பதாகவும், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் இதில் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
webdunia

இந்த நிலையில், மறைந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் சகோதரும் நடிகருமான சிவராஜ்குமார் ரஜினி169 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

இதனால் ரஜினி ரசிகர்களும், சிவராஜ்குமார் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் நடிக்க வந்தது ஏன் அட்லி பட ஹீரோயின் ஓபன் டாக்