Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓபிஎஸ் உடன் ஜெ தீபா திடீர் சந்திப்பு.. மீண்டும் அரசியலா?

Advertiesment
Deepa
, வியாழன், 2 பிப்ரவரி 2023 (08:09 IST)
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா திடீரென சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் என இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கும் நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலின் முடிவில் உண்மையான அதிமுக எது என்பது தெரிந்துவிடும். 
 
இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா தனது கணவருடன் ஓ பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்துள்ளார். குடும்ப நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைப்பு விடுக்க ஓ பன்னீர்செல்வம் அவர்களை சந்திக்க வந்ததாகவும் அரசியலை தாண்டி அவருடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது என்றும் ஜெ தீபா தெரிவித்துள்ளார்.
 
மேலும் அரசியல் குறித்த கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஓ பன்னீர் செல்வம் சந்திப்பின்போது அவர் அதிமுக மற்றும் அரசியல் குறித்து பேசி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து மீண்டும் அவர் தீவிர அரசியலில் இறங்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மற்றபடி
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!