தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் திடீரென மறைந்த முற்போக்கு: என்ன ஆனது?
அதிமுகவின் வேட்பாளர் இன்று காலை அறிவிக்கப்பட்ட நிலையில் ஈரோட்டில் இன்று தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. அதில் தேசிய ஜனனாக முற்போக்கு கூட்டணி என இருந்ததை அடுத்து அதிமுக, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதா என்ற கேள்வி எழுந்தது.
அதுமட்டும் இன்றி கூட்டணி கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் வரிசையிலும் பிரதமர் மோடி அண்ணாமலை படங்கள் இல்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறந்து வைக்கப்பட்ட சில மணி நேரத்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பேனரில் திடீரென முற்போக்கு என்பது ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டது
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்ற நிலையில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை, திடீரென பேனரில் முற்போக்கு மறைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அப்படி என்றால் பாஜக கூட்டணியில் தான் அதிமுக இருக்கிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதற்கு டெல்லியில் இருந்து அண்ணாமலை திரும்பி வந்தால் தான் பதில் கிடைக்குமா அல்லது எடப்பாடி பழனிசாமி இதற்கு விளக்கம் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.