Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கு உத்தரவு: என்ன இருக்கும்? என்ன இருக்காது? என்ன செய்ய வேண்டும்? விரிவான பார்வை!

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (09:43 IST)
இன்னும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய கடமைகளை பார்ப்போம்... 
 
நேற்று இரவு 8 மணிக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு மக்கள் ஊரடங்கை கடை பிடிக்க வேண்டும் என தெரிவித்தார். ஊரடங்கின் மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம் என இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார். 
 
ஏற்கனவே தமிழகத்தி; 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் இது இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவின் போது நாடு எப்படி இருக்கும், மக்கள் எப்படி இருக்க வேண்டும் என பார்ப்போம்... 

 
என்னென்ன இருக்கும்: 
> அரசு துறையின் தலைமை அலுவலகங்கள் போதிய பணியாளர்களுடன் வழக்கம் போல செயல்படும். 
> நீதிமன்றங்கள், மாவட்ட நிர்வாகம், மின்சார வாரியங்கள், மெட்ரோ குடிநீர், குடிநீர் விநியோகத் துறைகள் இயங்கும்
> ரேஷன் கடைகள் மற்றும் அதுதொடர்பான அலுவலகங்கள், ஆவின் மற்றும் பால் ஒன்றியங்கள், அம்மா உணவகங்கள் தமிழகத்தில் செயல்படும்.
> மருத்துவமனைகள், மருந்தகங்கள், சுகாதாரம் தொடர்பான பொருட்கள் உற்பத்திப் பிரிவுகள் செயல்படும். 
> மருத்துவம் சார்ந்த அனைத்து கல்வி நிறுவனங்களும் வழக்கம் போல இயங்கும்.
> அத்தியாவசிய மற்றும் அழியக் கூடிய பொருட்கள் தொடர்பான விற்பனைகளுக்கு அனுமதி உண்டு. 
> ரிசர்வ் வங்கி வழிமுறைகளின்படி வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் செயல்படும்.
> உணவகங்களில் பார்சல் உணவுகள் மட்டுமே வழங்கப்படும். தேநீர் கடைகள் செயல்படலாம். 
> பெட்ரோல் விற்பனை நிலையங்கள், எரிவாயு நிலையங்கள் செயல்படும். 
> லாரிகள், டெம்போக்கள், சரக்கு லாரிகள் உள்ளிட்ட அனைத்து சரக்கு வாகனங்களும் இயங்கும்.
> மருத்துவமனைகளிலிருந்து வீடுகளுக்கு வாடகை கார்கள் இயங்கும். 
> தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்கள் செயல்படும்.

 
என்னென்ன இருக்காது: 
> அரசு, தனியார் பேருந்துகள், மெட்ரோ சேவை, டாக்ஸி, ஷேர் ஆட்டோ, ஆட்டோ என அனைத்திற்கும் தடை. 
> ஸ்விக்கி, ஷொமாட்டோ ஆகிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது.
> மதவழிபாட்டு தலங்களில் பொதுமக்களின் வழிபாட்டுக்கு அனுமதி கிடையாது.
> டாஸ்மாக் மதுபானக் கடைகள் முழுவதுமாக மூடப்படும். 
> ரயில், விமான நிலையங்கள் திறந்திருந்தாலும் சேவைகள் இருக்காது.
மக்கள் செய்ய வேண்டியது என்ன: 
> பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும்.
> பொது இடங்களில் மக்கள் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை. 
> மார்ச் 16 அல்லது அதற்கு முன்பு பதிவு செய்த திருமணங்களை மட்டுமே நடத்த வேண்டும்.
> கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும். 
> முடிந்த வரை வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டில் இருப்பது நல்லது. 
> வீட்டிலும் ஒழுங்கான சுகாதார முறைகளை கைப்பிடிக்க வேண்டும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments