Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த நேரத்திலும் மலிவான அரசியல் செய்யும் கமல்ஹாசன்: நெட்டிசன்கள் தாக்கு

Advertiesment
இந்த நேரத்திலும் மலிவான அரசியல் செய்யும் கமல்ஹாசன்: நெட்டிசன்கள் தாக்கு
, புதன், 25 மார்ச் 2020 (07:23 IST)
கொரோனா வைரசால் உலகம் முழுவதுமே திண்டாட்டத்தில் உள்ளது/ இந்த வைரஸை கட்டுப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா வைரஸை எப்படி கட்டுவது எந்த வழிமுறையும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போதைக்கு மனித இனத்திற்கு இருக்கும் ஒரே வழி மனிதர்கள் அனைவரையும் வீட்டுக்குள் முடக்கி வைப்பது ஒன்றுதானே தவிர வேறு வழியில்லை என்று அனைத்து நாடுகளின் அரசுகளும் இதை கடைபிடித்து வருகிறது 
 
இதனையடுத்து நேற்று பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் அமல்படுத்த போவதாக அறிவித்தார். மேலும் இந்த 21 நாட்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்கவில்லை என்றால் நாடு 21 வருடங்கள் பின்னோக்கி செல்லும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மக்களின் நலன் கருதியே இந்தநடவடிக்கை என்றும் அவர் தெரிவித்திருந்தார் பிரதமரின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட வரவேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் 21 நாட்கள் ஊரடங்கு குறித்து கூறியதாவது: உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில்,அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்
 
கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் இந்த நேரத்தில் கூட மலிவான அரசியல் செய்ய வேண்டுமா என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ்: அதிர்ச்சி தகவல்