கொரோனா வைரஸால் பாதிக்கபப்ட்டு சிகிச்சை பெற்று வந்த மதுரை நோயாளி இறந்ததன் மூலம் தமிழகத்தில் முதல் கொரோனா பலி நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வரை 18 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் நேற்று அனுமதிக்கப்பட்ட 54 வயது மதிக்கத்தக்க நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் முதல் கொரோனா பலி நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் இவரின் இறப்புக்குக் காரணம் வயது மூப்பும், நாட்பட்ட சில நோய்களும் இருந்ததுவே காரணம் என சொல்லப்படுகிறது. மரணம் குறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன் டிவிட்டில் ‘சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கொரோனா வைரஸ் நோயாளி உயிரிழந்துள்ளார். அவருக்கு நீண்ட நாட்களாக COPD எனப்படும் நுரையீரல் பிரச்சனையும், நீரிழிவு நோயும் மற்றும் உயர் அழுத்த நோயும் இருந்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.