Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா கட்டமைப்புக்கு ரூ .15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு – பிரதமர் மோடி அதிரடி உத்தரவு !!!

Advertiesment
கொரோனா கட்டமைப்புக்கு ரூ .15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு – பிரதமர் மோடி அதிரடி உத்தரவு !!!
, செவ்வாய், 24 மார்ச் 2020 (21:20 IST)
கொரோனா கட்டமைப்புக்கு ரூ .15 ஆயிரம் கோடி ஒதுக்கிடு – பிரதமர் மோடி அதிரடி உத்தரவு !!!

தற்போது மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில், ஊரடங்கின் மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதிகாப்பே முக்கியம் . இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு மக்கள் ஊரடங்கை கடை பிடிக்க வேண்டும். ஒவ்வொருவரும் எனக்கு முக்கியம். எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஒருவருக்கு தெரியாமலே வைரஸ் தொற்று ஏற்படும், அதனால் வீட்டிக்குள் உறவினர்களை மாத்திரம் அனுமதிக்க வேண்டும். எனக்கு ஒவ்வொரு இந்தியரும் முக்கியம் அதனால் இந்தியர்கள் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் அதற்காக உங்களை கையெடுத்து கேட்டுக்கொள்கிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தடைகளை தகர்த்து நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டாம். இன்னும் 21 நாட்களுக்கு தேச மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. மக்கள் விளையாட்டாக இதை எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டு, ஊரடங்கை கடைப்பிடிக்காவிட்டால் நாட்டில் உள்ள குடும்பங்க பல இழப்புகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

நீங்கள் வெளியே சென்றாலும் வைரஸ் உங்கல் வீட்டிற்குள் அடியெடுத்துச் செல்லும், இதற்கு சுய கட்டுப்பாடு சுய சுத்தம் முக்கியம்,  காட்டுத்தீ போல் வைரஸ் பரவி வருகிறது. வல்லரசு நாடுகளே கூட கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை, இதன் விபரீதத்தை புரியாமல் விளையாட்டாக யாரும் அணுக வேண்டாம். கொரோனாவை தடுக்க 3 வார கால விலகல் என்பது முக்கியம். மருத்துவர்களின் ஆலோசனை இன்றி யாரும் மருந்துகளை வாங்கவோ உட்கொள்ளவோ கூடாது.

மருத்துவர்கள் இரவு பகலாக சேவையாற்றி வருகின்றனர்.  ஊரடங்கின்போது மருத்துவர்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதியில்லை; இன்று நாடு முழுவடும் தனிமைப்படுத்தப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது உங்கள் குடும்பங்களை காப்பாற்ற எடுக்கப்படுகிறது. என தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக விலகல் மூலம் மட்டுமே வைரஸ் பரவுவதை தடுக்க முடியும். கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் ஊரடங்கை விட இது கடினமாக இருக்கு ம். தடை இல்லாமல் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும். கொரோனா தடுக்க மத்திய –மாநில அரசுகள் பணியாற்றி வருகின்றனர். அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் பொறுமையுடன் ஆதரியுங்கள். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் சிரமங்களை மக்கள் உணர வேண்டும். ஆபத்தை பொருட்படுத்தாமல்  செய்திகளைத் தரும் ஊடகத்தினருக்காகவும் பிராத்தியுங்கள். பொருட்கள் வாங்க ஒரே இடத்தில் எல்லோரும் குவியக் கூடாது. காவல்துறையினர் உள்ளிட்ட சேவை பணியாளர்களுக்கு நன்றி தெரியுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு… மக்களின் உயிரை காப்பற்றத்தான் – பிரதமர் மோடி உருக்கம்!