Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் ஒரு மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (07:58 IST)
இன்னும் ஒரு மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது 
 
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், விழுப்புரம்,பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாமக்கல், புதுக்கோட்டை  ஆகிய 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை அறிவிப்பு வெளியாகி உள்ளது
 
எனவே மேற்கண்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொய் வழக்கு போடுவதில் காட்டும் கவனத்தை கள்ளச்சாராயத்தில் காட்டுங்கள் சவுக்கு சங்கர் கோஷம்..!

தலைவா என்னை காப்பாற்றுங்க.. கள்ளக்குறிச்சி சென்ற விஜய்யிடம் ரசிகர் கோரிக்கை..!

ஆபரேஷன் தியேட்டரில் பாலியல் அத்துமீறல்..! அரசு மருத்துவர் உல்லாசம்..! நடவடிக்கை பாயும் என அமைச்சர் உறுதி.!!

கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்திற்கு பாஜக நிதி உதவி..! அண்ணாமலை அறிவிப்பு..!

ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்திய மோடியால் வினாத்தாள் கசிவை ஏன் நிறுத்த முடியவில்லை? ராகுல்காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments