சென்னை க்ரோம்பேட்டையில் உள்ள பிரபல திரையரங்கத்தில் ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பலர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் ரஜினிகாந்த் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அவரது போயஸ் கார்டன் வீட்டின் முன்பு இன்று நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடினர்.
ரஜினி பிறந்த நாள் குறித்து டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.ரஜினியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்திருந்த பாபா படம் மீண்டும் ரிலீஸாகியுள்ள நிலையில் பலரும் இன்று அதை பார்த்து அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
மேலும் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது ரசிகர்களுக்கு மேலும் குஷியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் சென்னை க்ரோம்பேட்டையில் உள்ள பிரபல திரையரங்கமான வெற்றி திரையரங்கத்தில் ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் ரசிகர்களுடன் லதா ரஜினிகாந்த் பங்கேற்றார். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.