Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாமதமாக வந்த மாணவர்களை மழையில் நிற்க வைத்த நிர்வாகம்: பெற்றோர் போராட்டம்!

Advertiesment
school3
, திங்கள், 12 டிசம்பர் 2022 (13:10 IST)
தாமதமாக வந்த மாணவர்களை மழையில் நிற்க வைத்த நிர்வாகம்: பெற்றோர் போராட்டம்!
சென்னை அருகே உள்ள சிட்லபாக்கத்தில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களை மழையில் நிற்க வைத்த பள்ளி நிர்வாகத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னை அருகே சிட்லபாக்கம் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களை மழையில் நிற்க வைத்ததாக தெரிகிறது .
 
இது குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து திடீரென முற்றுகை போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .
 
பள்ளி அருகே சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக தாமதமாக வந்த காரணத்தினால் வகுப்புகளுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்ததாகவும் அதுமட்டுமின்றி மழையில் நனைய வைத்ததாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
இதனையடுத்து பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்ஜெட் விலை சாம்சங் ஸ்மார்ட்போன் : கேல்கஸி M04 எப்படி?