Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Siva
வியாழன், 7 நவம்பர் 2024 (07:41 IST)
சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இந்த மழை அடுத்த வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 தெற்கு வங்கக்கடலின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் இந்த வாரமும் அடுத்த வாரமும் மழை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments