நாளை முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக இருப்பதை அடுத்து தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாகவும், தமிழகத்தில் பருவ மழை பெய்து வருவதன் காரணமாகவும், நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
	 
	நாளை, அதாவது நவம்பர் 7ஆம் தேதி முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
	 
	குறிப்பாக கடலோர பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கடற்கரை ஓரப்பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதி, வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், நவம்பர் 8ஆம் தேதி மற்றும் அதன் அடுத்த சில நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.