Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் மட்டும் 70 பெட்ரோல் பங்க் மூடல்; அதிர்ச்சி காரணம்..!

Advertiesment
petrol

Mahendran

, புதன், 6 நவம்பர் 2024 (11:42 IST)
சென்னையில் கடந்த சில மாதங்களில் மட்டும் 70 பெட்ரோல் பங்க் மூடப்பட்டதாகவும் இனி சென்னை போன்ற பெருநகரங்களில் பெட்ரோல் பங்க் நடத்துவது சாத்தியமில்லை என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பெரும்பாலான பெட்ரோல் பங்க் குத்தகைக்கு விடப்பட்ட நிலங்களில் இயங்கி வரும் நிலையில், ரியல் எஸ்டேட் தொழில் ஏற்றம் காரணமாக நில உரிமையாளர்கள் இடத்தை காலி செய்யச் சொல்வதாகவும், அதில் வீடு மற்றும் கடைகள் கட்டி வாடகைக்கு விடுவதற்கு அவர்கள் விரும்புவதாகவும், பெட்ரோல் பங்கு அமைப்பதற்கு வாடகைக்கோ அல்லது குத்தகை விடுவதோ அவர்களுக்கு பெரிய அளவில் லாபம் இல்லை என்பதால் இந்த முடிவு எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
எனவே, பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் தற்போது நகரத்திற்கு வெளியே அமைந்து வருகிறது என்றும், சென்னை நகருக்குள் பெட்ரோல் பங்க் இனி நடத்துவது சாத்தியக் குறைவு என்றும், எரிபொருள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 
 
அது மட்டும் இல்லாது, தொழிலாளர் சம்பளம், மின்கட்டணம் அதிகரித்து உள்ளதை அடுத்து விற்பனை நிலையங்களை இயக்கத்திற்கான செலவுகள் அதிகரித்ததாகவும், பெட்ரோல் பங்க் கடை மூடுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. 
 
இப்போதே  போதிய பெட்ரோல் பங்க் இல்லாததால், நீண்ட தூரம் சென்று பெட்ரோல் வாங்கும் நிலை இருக்கும் நிலையில், இனி வருங்காலத்தில் சென்னை புறநகரப் பகுதியில் மட்டுமே பெட்ரோல் நிலையங்களில் இயங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை முதல் தீவிரமாகும் பருவமழை.. தென்மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!