ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் கல்லட்டி பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் பல்வேறு வழித்தடங்களில் செல்லும் நிலையில் ஆபத்தான பாதையாக கருதப்படுவது கல்லட்டி பாதை. மசினக்குடியில் இருந்து கல்லட்டி வழியாக ஊட்டி செல்லும் இந்த மலைப்பாதை அதிகமான வளைவுகளை கொண்ட ஆபத்தான பகுதியாகும்.
ஆண்டுதோறும் இந்த வழித்தடத்தில் வாகனங்கள் விபத்திற்கு உள்ளாவது வாடிக்கையாக உள்ளது. அனுபவம் வாய்ந்த வாகன ஓட்டிகளே இந்த மலைப்பாதையில் சிரமப்படுவார்கள் என பலரும் சொல்கின்றனர்.
அடிக்கடி ஏற்படும் தொடர் விபத்துகள் காரணமாக சுற்றுலா பயணிகள் கல்லட்டி பாதையில் பயணம் செய்ய தடை விதித்து உத்தரவு வெளியாகியுள்ளது.